நான் மருத்துவரானால் - கட்டுரை
முன்னுரை : உலகில் வாழும் மக்கள், ஏதேனும் ஒரு தொழிலைச் செய்துதான் உயிர்வாழ்கிறார்கள். ஒவ்வொரு தொழிலும் ஒவ்வொரு வகையில் முக்கியமானதாகவே விளங்குகிறது. உழவுத்தொழில் என்பது, உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் உணவை வழங்குகிறது. அதனால்தான் " சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் " என்றார் வள்ளுவர். என்கனவு: மக்கள் வாழ்வுக்கு உதவுதானே முக்கியம். இப்படிச் சிந்திக்கிற பொழுது ஒவ்வொரு தொழிலும் ஒவ்வொரு வகையில் மனித வாழ்வுக்கு முக்கியமானதாகவே தெரிகிறது. நைட்டிங்கேல் அம்மையார், ஆல்பிரடு சுவிட்சர், நஞ்சுண்டராவ் முதலானவரின் மருத்துவப்பணி குறித்துப் படித்தவன் நான். எனவே, என்னைப் பொறுத்தவரை, நான் மருத்துவத் தொழிலை மேற்கொள்ளவே பெரிதும் விரும்புகிறேன். நான் மருத்துவராக வேண்டும். இதுவே என் கனவு. என் கனவு மெய்ப்பட வேண்டும். எதிர்காலத்தில் நான் சிறந்த மருத்துவராகிச் சமுதாயத்திற்குப் பாடுபடவேண்டும் என்ற எண்ணத்திலேயே இருக்கிறேன். மருத்துவத் தொழில்: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது உலக வழக்கு! ஆனாலும், சந்தர்ப்பச...