நம் நாடு - கவிதை


அளப்பறிய அனைத்துவள நாடு
எந்தையரும் முந்தையரும் வாழ்ந்திருந்த நாடு
பொன்விஞ்சும் நவமணிகள் விளைவுதரும் நாடு
பொங்கிவரும் அருவிகளும் கொட்டுகின்ற நாடு
பொன்வண்ண கதிரொளியில் மின்னுகின்ற நாடு
பொன்மகளின் கவிமகளின் மறமகளின் நாடு
கண்ணலோடு மாபலாவா ழைக்கனிகள் நாடு
கழனிகளும் காடுகளும் அருள்சுரக்கும் நாடு
கலைகளெலாம் ஒருங்கிணைந்து வளர்ந்திட்ட நாடு
காவியங்கள் பலபடைத்து மொழிவளர்த்த நாடு
விலைமதியா பெட்டகங்கள் கோயிட்கொண்ட நாடு
விரதீரம் உயிர்போன்று உற்றிருக்கும் நாடு
அலைகடட்கள் முப்புறமும் தாலாட்டும் நாடு
ஆகாயம் முட்டுகின்ற புகழ்பெற்ற நாடு
தலைமையேற்று உலகாள வல்லதான நாடு
தாய்மைதனை தெய்வமென வணங்குகின்ற நாடு

கனிவளங்கள் நீர் வளங்கள் கொண்டதான நாடு
கண்கொள்ளா இயற்கைவளம் நிறைந்ததான நாடு
பனிமலையும் அரணாக விளங்குகின்ற நாடு
பண்பண்பு ஆன்மீகம் ஒளிர்கின்ற நாடு
வனிதையர்கள் எங்கெதிலும் முன்நிற்கும் நாடு
வற்றாமல் செல்வங்கள் வளர்ந்துவரும் நாடு
தனித்தன்மை தான்கொண்டு தலைநிமிர்ந்த நாடு
தாய்நாட்டின் அரும்பெருமை போற்றிநீயும் பாடு!

- கவிஞர் பெ.சித்தையன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

பசுமையும் பாரம்பரியமும் - பேச்சுப்போட்டி,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு -பேச்சுப் போட்டி