அப்துல்கலாம் - கட்டுரை
முன்னுரை: 21-ஆம் நூற்றாண்டின் இணையற்ற அறிவியல் அறிஞரும், பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் அவர்களே நான் விரும்பும் அறிவியல் அறிஞராவார். பாரதத்தின் தென் கோடியில் பிறந்து, வளர்ந்து தன் உன்னத உழைப்பால் உயர்ந்து பாரதத்தின் வடகோடியில் இந்தியாவின் முதல் குடிமகனாக சிம்மாசனத்தில் அமர்ந்த பண்பாளர் அப்துல் கலாம் அவர்கள். அவரைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம். பிறப்பு: விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் இன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடியில் 1931-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி ஜைனுல்லா மரைக்காயர்-ஆஷிமா தம்பதியருக்கு மகனாக பிறந்தார். அறிவியல் அறிஞர் கலாம்: 1963-இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் சேர்ந்த கலாம் அவர்கள் எஸ்.எல்.வி. III இல் பணியாற்றினார். அதன் மூலம் ரோகிணி என்ற செயற்கைக்கோளின் திட்ட இயக்குநராக பணியாற்றி அதை விண்ணில் ஏவி பூமியை வெற்றிகரமாகக் சுற்றி வரச் செய்தார். கால் ஊனமுற்றோர், இளம்பிள்ளை வாதத்...