பேச்சுப்போட்டி முன்னுரை -18

தமிழோடு விளையாடி
என் உரையோடு உறவாடி
நெஞ்சத்தில் நெருப்பேற்றி
நேர்மையின் குரலெழுப்பி...

சிந்தனையை செதுக்கிவைத்து
சிறகுகளை விரித்துக்காட்டி
வீரத்தின் விதை விதைத்து
வெற்றிக்கனி பறிக்கவந்தேன்....

சொற்களோடு போராடி
சோம்பலை ஓடவிட்டு
தன்னம்பிக்கை தீ மூட்டி
தலைநிமிர்ந்து நிற்கவந்தேன்!

பேச்சாலே பாலமிட்டு
பேரெழுச்சி பாதை கட்டி
இளையோரின் இதயத்தில்
இனிய கனவை விதைக்கவந்தேன்

இமயமாய் வீற்றிருக்கும் நடுவோர்களே
இதயமாய் வீற்றிருக்கும்  அவையோர்களே
அன்னைத் தமிழை முதல் வணங்கி அவையோர் அனைவருக்கும் தலை வணங்கி
பேசப்போகிறேன் என் தலைப்பில் இறங்கி......

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

பசுமையும் பாரம்பரியமும் - பேச்சுப்போட்டி,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு -பேச்சுப் போட்டி