சுதந்திர தின கவிதை
அடிமை ஆக்குவதே
ஆங்கிலேயர்கள் வழக்கம்...
இந்தியருக்கு இல்லை
அடிபணியும் பழக்கம்...
அதனாலேயே பிறந்தது
விடுதலை முழக்கம்...
அதை பெரும் வரை யார்
கண்ணிலும் இல்லை உறக்கம்....
ஆங்கிலயரின் அடிபணிய
வைக்கும் நோக்கம்
ஒற்றுமைக்கு வித்திட்ட
விடுதலையின் மார்க்கம்..
அனைவரின் கைகளும் ஒற்றுமையில் கோர்க்கும்...
அடிமை சங்கிலியை
உடைத்தெறியப் பார்க்கும். ...
நினைத்த நாளும் வந்தடைய ... மறித்த ஆளும் வெந்துடைய... தியாகிகளின் அறப்போர் வெடிக்க... அடிமை சங்கிலியை
தியாகிகள் உடைக்க
இந்திய நாட்டிற்கு
சுதந்திரம் கிடைக்க....
அந்த சுதந்திர காற்றை சுவாசிப்போம்.
நம் முன்னோர்கள் தியாகத்தை நேசிப்போம்...
கருத்துகள்
கருத்துரையிடுக