காமராஜர் கவிதை

ஏழைகளின் அறிவுப் பசியை போக்க
அவர்களின் வயிற்றுப் பசி போக்கியவரே...
பள்ளிகள் பல திறந்து
தம் பதவியில் சிறந்து 
அரசியலில் உயர்ந்து
தமிழகத்தில் தலை நிமிர்ந்து 
இறந்தும் வாழும் ஏழைப்பங்காளரே.....
உங்களால் வாழுது அறமே 
உங்களை பாடுவது எங்கள் வரமே 
அவர் நிறமோ கருப்பு
அவர் தரமோ சிறப்பு
அவர் ஆறடி உயரம்
அவரால் ஏழ்மைக்கு துயரம் 
அவர் பெரிதாக ஒன்றும் படிக்கவில்லை
அவரை படிக்காதவர் என்று 
எவரும் இல்லை 
அள்ளிக் கொடுத்தவர் 
கைகளோ நீளம்
கோடி யுகம் கடந்தும் அவர் புகழ் இம்மண்ணிலே வாழும்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

பசுமையும் பாரம்பரியமும் - பேச்சுப்போட்டி,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு -பேச்சுப் போட்டி