முன்னுரை -17 ஆன்மீக முன்னுரை
பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
யிடித்துவழி காணும் .
சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுறுக்கியெழு
மறத்தைநிலை காணும் ..
கற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான்
பெற்றிட்ட பேரறிவும்
ஒன்றுமில்லை...
ஆனாலும்
உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா
பற்றியெனைத் தூக்கி விடு பேரிறைவா....
இறையை வணங்கி
அவையை வணங்கி
அவையில் இருக்கும்
அனைவரையும்
இறையாய் வணங்கி
என் உரையை துவங்குகிறேன்....
கருத்துகள்
கருத்துரையிடுக