பழந்தமிழர் பண்பாடு
முன்னுரை : 'தமிழ்'. மிகப் பழைமையான உயர்தனிச் செம்மொழி, தமிழைப் பேசிய ' தமிழ் இனம் '. அம்மொழியினும் தொன்மையானது. அப்பழைமையான தமிழ் இனத்தின் பண்பாட்டையும், பெருமையையும் கற்போர் அறிவர். இனித் தமிழரின் பழைமையான பண்பாடு பற்றிக் காண்போம். பண்பாடு : பண்படுத்துவது என்பதனால், உருவாவது பண்பாடு ஆகும். மனிதன் பண்பட, அவன் உள்ளம் பண்பட வேண்டும். மனித உள்ளம் பண்படுவது என்பது, பெரும்பாலும் அவன் கற்கும் கல்வியால் எனலாம். கல்வி என்பது இன்று உள்ளதுபோன்ற ஏட்டுக்கல்வி மட்டும் அன்று; 'நாகரிகம்' என்பது மக்களின் திருந்திய வாழ்க்கை ஆகும். 'பண்பாடு' என்பது திருந்திய ஒழுக்கமாகும். சுருக்கமாகக் கூறுவதானால், ' உள்ளத்தின் செம்மையே பண்பாடு ஆகும். பண்பாடு நாகரிகத்தினும் சிறந்ததாகும். பண்பாட்டுச் சிறப்பு: ' பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகல்' எனக் கலித்தொகை, பண்பாட்டுக்கு இலக்கணம் கூறுகிறது. அதாவது, உலக வழக்கம் அறிந்து ஒழுகுதலே பண்பாடாகும். பெருமை, சான்றாண்மைக் குணங்களைப் பெற்றவருக்கு இது இயலும். எனவே, பண்டைத் தமிழர...