போதை ஒழிப்பு - பேச்சுப்போட்டி
இலக்கு தெளிவானால் பாதைகள் புலப்படும் நம் பயணம் சுகப்படும்.
நம்மைப் பிரிக்கின்ற சாதிகள் இல்லை,
நம்மைப் பிரிக்கின்ற சாதிகள் இல்லை,
இனி மத பேதங்கள் இல்லை,
நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளை.
கிழிக்கின்ற நாள்காட்டி,
கிழிக்கின்ற நாள்காட்டி,
கிழக்கினில் வழிகாட்டி,
எழுப்பும் உன் தோள் தட்டி.
விழிக்கின்ற மலர் கூட்டம்,
வெளி எங்கும் மணம் கூட்டும்..
தமிழில் கிறங்கி
வந்தோரை வணங்கி
பேசப்போகிறேன் என்
உரையை துவங்கி....
விழிக்கின்ற மலர் கூட்டம்,
வெளி எங்கும் மணம் கூட்டும்..
தமிழில் கிறங்கி
வந்தோரை வணங்கி
பேசப்போகிறேன் என்
உரையை துவங்கி....
சொரிய சொரிய சுகமாய் இருக்கும்.,
முடிவில் தெரியுமாம் வலி என்பது போல இன்று நாட்டில் பல கோடிக்கும் மேலானோர் அற்ப சுகத்திற்காக தன்னை கெடுத்துக்கொண்டு தன் குடும்பத்தையும் சீரழித்து தங்கள் வாழ்க்கையையே இழக்கின்றனர்.
மானிடப் பிறவியில் நாமடைந்துள்ள செல்வங்களுள் எல்லாம் சிறந்தது அறிவுச் செல்வமே ஆகும். அவ்வறிவாலேயே நன்மை தீமை, குற்றம் என்பதை எல்லாம் பகுத்துணர்கின்றோம். இத்தகைய அறிவை வளர்க்கின்றவர்களே மேலோர்; அதைக் கெடுக்கின்றவர் கீழோராவர். போதை நம் அறிவை மயக்குகிறது; நாளடைவில் அறிவை கெடுத்து விடுகிறது. செய்யத்தக்கது இது, செய்யத்தகாதது இது என்று பகுத்தறியும் திறமையை இழந்து விட்டால் மாலுமி இல்லாத கப்பல் போல நமது வாழ்க்கை நெறி கெட்டொழியும்.

இதைத்தான் பண்டைய தமிழ் இலக்கியம் ஒரு பாட்டில் சொல்கிறது
"மயக்குங் கள்ளும் மன்னுயிர் கோறலும்
கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
நல்லறம் செய்வோர் நல்லுல கடைதலும்
அல்லறம் செய்வோர் அருநர கடைதலும்
உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்" என்று.
மூளையை மழுங்க செய்து புத்தியை தடுமாறச் செய்யும் ஒரு வித கிரக்கமே போதை. இந்த போதையில் ஒரு வித சுகம் கிடைப்பதாக சிலர் எண்ணுகின்றனர். இவர்கள் விளக்கில் விழும் விட்டில் பூச்சிகளாய் வாழ்வை தொலைகின்றனர். உண்மையில் போதை தருவதாக நினைக்கும் அற்ப சுகம் பெறும் அழிவுக்கு கொண்டு செல்வதை அவர்கள் உணர்வதில்லை. இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதை பழக்கத்திற்கு அடிமையாகி சீரழிவதை இப்போது காண முடிகிறது. மது, கஞ்சா, புகையிலை, அபின், பிரவுன் சுகர், போதைபாக்கு, பான்பராக் போன்ற போதை பொருட்களின் பட்டியல் மிக நீளமானது.
மதுப்பழக்கம் ஒருவனது உடல்நலனை கெடுக்கிறது. நாடி நரம்புகள் தளர்ந்து அதனால் அவர்கள் செயலிழந்து உடல் வலிமை அற்றவர் ஆகின்றனர். உழைப்பதற்குரிய ஊக்கம் குறைகிறது ஒரு தரம் மதுவை குடித்தால் அவரின் உயிரைக் குடிக்கும் கூற்றுவனாகிறது. வெறிகொண்டவன் போல பித்து பிடித்தவன் போல நடந்து கொள்வதை நாம் கண்ணால் காண்கிறோம். சமுதாயத்தில் அவனுக்கு குடிகாரன் எனும் பெயர் ஏற்படுகிறது. குடிகாரன் இருக்கும் குடும்பத்தில் திருமணம் செய்யவும் அஞ்சுகின்றனர். வறுமை தாண்டவமாடுகிறது. மனைவி, பெற்ற குழந்தை ஆகியோரை கொலை செய்யும் அளவிற்கு தூண்டுகிறது இந்த போதையும் மதுவும்.
தன் கைப்பொருளைக் கொடுத்துத் வாங்கி தன்னுடலை மறக்கும் அறியாமையைக் ஏற்படுத்துவது இந்த மது. இதைத்தான் திருவள்ளுவரும்
"கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்". என்கிறார் .
"பாவிப் பயலே கொஞ்சம் கேளடா
பாலூட்டி வளர்த்த நானுன் தாயடா
பற்றி எரியுதெந்தன் வயிறடா
மதுகள்ளை மறந்து நீயும் வாழடா

கள்ளுக்குடி உன் குடியைக் கெடுத்திடும்
கடன்காரனாக உன்னை மாற்றிடும்
கண்டகண்ட பழக்கமெல்லாம் பழக்கிடும்
கடைசியில் கட்டையிலே கொண்டு போய்ச் சேர்த்திடும்
கடவுளே என் மகனும் இதனை உணரானோ
கள்ளுக்குடியை விட்டொழிந்து திருந்தானோ
அன்னை சொல்லு கேட்பானென்றால்
ஆறறிவு படைத்த அவனும் பேரறிஞன் ஆகிடுவானே."
என்று ஒரு தாய் இறைவனிடம் மன்றாடுவது போல் அமைகிறது ஒரு இலங்கை தமிழரின் பழைய பாடல்.
மதுவும் ஒரு முக்கிய போதைப் பொருள் தான் என்பது மறக்கடிக்கப்பட்டு வருகிறது. அரசாங்கமே விற்பனை செய்வதால் மது போதைப்பொருள் இல்லை என்று ஆகிவிடாது. அதனை அரசே விற்பனை செய்துவிட்டு மற்ற போதைப்பொருளுக்கு தடை போடுவது போதை பொருள்களை முற்றிலும் ஒழிக்கும் செயலாக இருக்க முடியாது. உடலைக் கெடுத்து மனதை சீரழித்து குடும்பத்தையே பாழாக்கும் போதை பொருள்களையும் மதுவையும் கைவிட வேண்டும் மக்கள்..
மது குடிப்பவரும் விஷம் குடிப்பவரும் வெவ்வேறானவர் அல்லர் என்பதை வள்ளுவர்
"துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்". என்றும்
போதைக்கு அடிமையானவனை பெற்ற தாய் கூட மதிக்க மாட்டாள் என்பதை
"ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி". என்றும் கண்டிக்கிறார்.
நண்பன் என்ற பெயரைக் கொண்டு, தீய பழக்கத்திற்கு ஆளாக்கும் மனிதனின் இனம்கண்டு விலகி நிற்பதே அறிவுடைமை. இதுவே தற்காப்பு முறையும் ஆகும். அறிவாளிகள் யாவரும் இப்பழக்கத்திற்கு அடிமை என்று கூறப்படினும், அவர்கள் சீக்கிரமே போதையினால் அழிந்தார்கள் என்பது கண்கூடாகக் காணும் உண்மையாகும்.
1.நமக்குத் தெரிந்த நண்பர்கள் போதைக்கு ஆளாகியிருந்தால் அவர்களைத் திருத்த முற்பட வேண்டும். மாறாக நாமும் அக்கழிவு நீரில் கலக்கக் கூடாது.
2.அத்தகையோரை மனத்தத்துவ நிபுணர்களிடம் அழைத்துச் சென்று அவர்களை உடனடியாக மாற்ற வேண்டும்.
3.போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை நல்லவர்களுடன் பழகச் செய்யவேண்டும்.
4.ஆசிரியர்கள், சான்றோர்கள். பெற்றோர்களுடன் இணைந்து செயல்படச்செய்ய வேண்டும்.
5.போதைப் பழக்கத்தை மாற்றும் நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும்.
6. சிறிது சிறிதாக மரணப்பாதைக்கு இட்டுச் செல்லும் போதைப் பழக்கத்தை அடியோடு ஒழித்து நல்வாழ்வு வாழ அனைவரும் பாடுபடவேண்டும்.
உண்மை மட்டுமே சரியானது,
அதன் உயர்வே என்றும் வரமாவது,
போதையின் இன்பம் கீழானது,
அதை தவிர்க்கும் வழியே முறையானது.
மாற்றம் ஒன்றே நிலையானது,
இதை ஏற்றால் வாழ்க்கை சுகமானது.
வீழ்ச்சியும் வாழ்வில் உயர்வானது.
வீழ்கின்ற அருவியே மேலானது.
மதுவால் சமுதாயம் வீழ்ந்தது போதும், மாற்றம் ஒன்றே இனி நமது வேதம்.
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.
வாய்மையே நம் வழக்கம்.
அதனால் வாழ்க்கையே இனிக்கும்.
முடிவில் வணங்குவதே நல்ல பழக்கம்.
வணங்கி முடிக்கிறேன் நன்றி வணக்கம்.
Nandri Anna
பதிலளிநீக்கு