பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

பேச்சுப்போட்டிகள் பேசும்பொழுது முன்னுரை, அதாவது பேச்சின் தொடக்கஉரை எவ்வளவு தெளிவாக இருக்கிறதோ எவ்வளவு நேர்த்தியாக இருக்கிறதோ அதை பொறுத்து நடுவரின் கவனத்தையும் பார்வையாளர்கள் கவனத்தையும் உங்களால் ஈர்க்க முடியும்.தொடக்கஉரை எந்த அளவிற்கு எதுகை மோனை கலந்து சுவையாக இருக்கிறது என்பதை பொறுத்து உங்களுக்கு பரிசு கிடைப்பதும் நிச்சயம் கைகூடும். எதுகை மோனையாக பேசி, பேச்சில் பட்டையை கிளப்பி பார்வையாளர்களை அசத்த கீழ்கண்ட முன்னுரைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்...

இது போன்ற பல முன்னுரைகளுக்கு கீழே உள்ள நமது youtube சேனல் லிங்கை பார்க்கவும்

Click Here For Our Youtube Channel

முன்னுரை - 1

"ஏடு தூக்கிப் பள்ளியில் இன்று பயிலும் பையன் தான், நாடு காக்கும் தலைவனாய் நாளை விளங்க போகிறான். தித்திக்கும் தேன்தமிழ் திக்கெட்டும் பரவட்டும் முத்தமிழ்தாய்க்கு என் முதற்கண் வணக்கங்கள். எதிர்காலம் பேய்குலத்தில், எதிர்நீச்சல் போட்டு நித்தம் நான் பேசிட எழுதிட பேதமை புரிந்திட நடுவர் அவர்களே, ஆசிரிய பெருமக்களே, வருங்கால தூண்களே, எதிர்காலம் நீங்களே, என் அன்பினிய மாணவச் செல்வங்களே, ஆன்றோர்களே, சான்றோர்களே, என்னை போன்றோர்களே, வையகமே, வானகமே, என்னை வாழ வைத்த தமிழகமே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம் ஆகட்டும் என்று சொல்லி தலைப்பிற்குள் நுழைகிறேன் தாருங்கள் தங்கள் காதுகளை...."

இந்த முன்னுரைகளை எப்படி வீரமாக பேசி உச்சரிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

CLICK HERE


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பசுமையும் பாரம்பரியமும் - பேச்சுப்போட்டி,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு -பேச்சுப் போட்டி