காந்தி - சிறுவர் பேச்சுப்போட்டி
நம்மைப் பிரிக்கின்ற சாதிகள் இல்லை,
இனி மத பேதங்கள் இல்லை,
நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளை.
கிழிக்கின்ற நாள்காட்டி,
கிழக்கினில் வழிகாட்டி,
எழுப்பும் உன் தோள் தட்டி.
விழிக்கின்ற மலர் கூட்டம்,
வெளி எங்கும் மணம் கூட்டும்..
தமிழில் மயங்கி
வந்தோரை வணங்கி
பேசப்போகிறேன் என்
உரையை துவங்கி....
இனி மத பேதங்கள் இல்லை,
நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளை.
கிழிக்கின்ற நாள்காட்டி,
கிழக்கினில் வழிகாட்டி,
எழுப்பும் உன் தோள் தட்டி.
விழிக்கின்ற மலர் கூட்டம்,
வெளி எங்கும் மணம் கூட்டும்..
தமிழில் மயங்கி
வந்தோரை வணங்கி
பேசப்போகிறேன் என்
உரையை துவங்கி....
சிறிய உருவம்
பெரிய பார்வை
எளிய உடை
உள்ளத்தில் அன்பு
எண்ணத்தில் பண்பு
சோர்வில்லா உழை
கனமில்லா தலை....
ஆடையை குறைத்து
அகிம்சை அணிந்த
காந்தியை பற்றித்தான் பேச வந்துள்ளேன்...
எளிமை, தூய்மை, நேர்மை என்னும் வாழ்வியல் நெறிகளால் இலட்சக்கணக்கான மக்களை ஈர்த்தவர், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மனித உரிமைகளுக்காகப் போராடியவர். உலகுக்கு வழிகாட்டும் வாழ்வியல் விழுமியங்களை முன்னிறுத்தியவர், மனிதநேயம், மத நல்லிணக்கம் போற்றியவர். தொழிலாளர் உரிமை, மகளிர் உரிமை, தீண்டாமை ஒழிப்பு, சமுதாய நல்லிணக்கம், மது ஒழிப்பு போன்ற மக்கள் நற்பணிகளுக்கு ஓயாது உழைத்து போராடியவர் மகாத்மா காந்தி அவர்கள்.
குஜராத்தில் உள்ள போர்பந்தர் என்னும் ஊரில், 1869-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி கரம்சந்த்-புத்திலிபாய் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.
தனது பத்தொன்பதாவது வயதில் பட்டப்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார். இந்தியாவை விட்டுப் புறப்படும் முன்பு தன் தாயிடம், மது, மாது, புலால் மூன்றையும் தொடுவதில்லை என்று சத்தியம் செய்து கொடுத்தார்.
திலகரின் மறைவுக்குப் பின் சுதந்திரப் போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தினார்.
விடுதலைப் போராட்டத்துடன் மத நல்லிணக்கம், தீண்டாமை ஒழிப்பு, மது விலக்கு, அந்நியத் துணி எதிர்ப்பு, பெண் விடுதலை என்று சமுதாய சீர்திருத்த இயக்கங்களை முன்னின்று நடத்தினார்.
சுதந்திரப் போராட்டத்தின் உச்சக்கட்டமாக, 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் இந்திய மக்களின் அனைத்துத் தரப்பினரின் எழுச்சியுடன் நடந்தது. இந்தப் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த ஆங்கிலேய அரசு இந்தியாவிற்கு விடுதலையளித்தது.
தாயின் மணிக்கொடி ஏந்தி
சுதந்திரம் வாங்கினார் காந்தி
இளைஞர்கள் நல்வழியில் சென்றால்
அதுவே அவர் ஆத்மாவின் சாந்தி.
இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீர் வாழ்க, வாழ்க என்று கூறி,
சுட்டாலும் சங்கு வெண்மை தரும்,
மிதித்தாலும் பூமி தாங்கி நிற்கும்,
சபித்தாலும் வானம் மழை கொடுக்கும்,
வெற்றி கிடைத்தால் அடக்கம் எழுந்து நிற்கும்,
வெற்றி கிடைத்தால் அடக்கம் எழுந்து நிற்கும்,
தோல்வி கிடைத்தாலும் என் பயணம் தொடர்ந்து நிற்கும்,
முடிவில் வணங்குவது என் வழக்கம்,
வாய்ப்பிற்கு நன்றி வணக்கம்
கருத்துகள்
கருத்துரையிடுக