போதை ஒழிப்பு - கவிதை

புகையிலை வெறுத்து
சிகரெட்டை நிறுத்து
மதுவை மறுத்து
வாழ்வை உயர்த்து

போகாதே போதையின் பின்னால் 
இழக்காதே வாழ்க்கையை தன்னால் 
தொடாதே நஞ்சை கையால்
விழாதே மற்றவர் முன்னால்

நீ ஊதித் தள்ளுவது 
சிகரட்டின் புகைவட்டம் அல்ல 
உன் வாழ்க்கையின் ஒளிவட்டம்

சிற்றின்பம் தருமென நினைத்து 
பேரின்ப வாழ்க்கையை இழந்து
பெற்றோரின் வேதனை மறந்து
உன் எதிர்கால கனவினை தொலைத்து

வாழ்க்கையின் தவறான பாதை 
அப்படி என்ன தருகிறது அந்த போதை 

புகையாலும் மதுவாலும் அழியாதே 
போதைக்கு என்றும் நீ பணியாதே..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

சுதந்திர தின பேச்சு போட்டி

பெண்மையை போற்றுவோம்- பேச்சுப்போட்டி