சுதந்திர தின விழா கவிதை

மண்ணுக்காகப் போராடி,
மக்களுக்காக உயிர் கொடுத்து,
வீரர்கள் தந்த சுதந்திரத்தை,
விழுந்திடாமல் காத்திடுவோம்!

காந்தியின் வழியில் நடந்திடுவோம்,
கண்ணியத்தோடு வாழ்ந்திடுவோம்,
உண்மை என்னும் பாதையிலே,
உயர்ந்த மனிதராய் நின்றிடுவோம்!

சுதந்திரம் என்பது உரிமை,
அதுவே நமது பெருமை,
ஒற்றுமையுடன் நாம் இருந்தால்,
உயரும் இந்தியாவின் அருமை!

கல்வி கற்று முன்னேறுவோம்,
கனவுகளை நாம் நனவாக்குவோம்,
தேசத்தின் புகழை உயர்த்திடுவோம்,
தலைநிமிர்ந்து வாழ்ந்திடுவோம்!

பாரதத் தாயின் மணிக்கொடி,
பட்டொளி வீசும் வெற்றிக்கொடி,
வானம் தொடும் வரை பறக்கட்டும்,
அனைவரின் வாழ்வும் சிறக்கட்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

சுதந்திர தின பேச்சு போட்டி

பெண்மையை போற்றுவோம்- பேச்சுப்போட்டி