கோடைக்காலம் - கட்டுரை

 முன்னுரை:
          பூமி சூரியனை சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சூரியனுக்கு அருகிலும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சூரியனுக்கு தொலைவாகவும் இடம் பெயர்கிறது. சூரியனுக்கு அருகில் நேராக அமையும் போது அதை கோடைக்காலம்  என்கிறோம்.

சூழல்  மாற்றங்கள்:
                 வெப்பநிலை அதிகரிக்கும், அனல் காற்று வீசும், நிலப்பரப்புகள் வறட்சியாக காணப்படும், நீர்ப்பரப்புகளில் இருந்து அதிகப்படியான நீர் ஆவியாகும், கானல் நீர் தோன்றும், ஒளியின் அளவு கூடுதலாக இருக்கும், பகல் பொழுது கூடுதலாக அமையும், புழுதி காற்று வீசும், திடீரென கோடை மழை பெய்யவும் வாய்ப்புண்டு, நீர்நிலைகள் வற்றிப்போகும், நிலத்தடி நீரின் அளவு குறையும், வறட்சி ஏற்படும். 

உடலியல்  மாற்றங்கள்:
                     கோடை வெப்பத்தின் காரணமாக நா வறட்சி ஏற்படும், மிகுதியான வியர்வை நம் உடலில் இருந்து வெளியேறும், நம் உடலில் தோளின் எரிச்சல் அதிகமாக இருக்கும். தலையில் ஈரத்தன்மை அதிகமாகும். நீர் கடுப்பு ஏற்படும், உடலில் சூடு அதிகரிக்கும், செரிமானம் அதிகரிக்கும், கண்களில் கூசும் தன்மை ஏற்படும், கண்களில் எரிச்சல், கண்களில் வறட்சி ஏற்பட வாய்ப்பு உண்டு. சுவாசத்தில் ஒழுங்கின்மை ஏற்படும்.
 
பாதிப்புகள்:
           வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக நில வறட்சி ஏற்பட்டு நிலத்தடி நீரின் அளவு குறையும். இதனால் நீர் பற்றாக்குறை ஏற்படும். ஆறு. ஏரி. குளம். கிணறுகள் இவற்றில் வெப்பத்தின் காரணமாக நீராவியாக மாறி நீரின் அளவு குறைந்து வறட்சி ஏற்படும். கோடை வெப்பத்தின் காரணமாக ஏற்படும் அதீத வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள அதிகமான மின்சாரம் பயன்படுத்தப்படுவதால் மின் தட்டுப்பாடு ஏற்படுகிறது.மிகுதியான வியர்வையின் காரணமாக உடலில் நீரின் அளவு குறைகிறது. உடலின் நீர் அதிகமாக  வேர்வை மூலமாக வெளியேறுவதால் உடலின் நீரின் அளவு குறைந்து நீர் கடுப்பு ஏற்படுகிறது. கண்களில் வறட்சி ஏற்படுவதால் கிருமிகள் கண்களை தாக்குவதால் கண் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகிறது. அதிகமான வியர்வை காரணமாக தோலில் பூஞ்சைகள் உருவாகி, தோல் அரிப்பு ஏற்படுகிறது. வெயில் நேரடியாக தோளில் படும் பொழுது தோள்கள் சிவந்து தோல் நோய்கள் ஏற்படுகிறது. மிகுதியான வியர்வை தலையில் ஏற்படுவதால் அழுக்குகள் தலையில் சேர்ந்து பொடுகு, பேன், தலையரிப்பு, முடி உதிதல் போன்றவை ஏற்படுகிறது. உடல் சூட்டின் காரணமாக கண் எரிச்சல், வயிற்று வலி, அம்மை, பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல், ஜுரம், கட்டி வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

செய்ய வேண்டியவைகள்:
                     தினம்தோறும் தவறாது இரண்டு வேளை குளிக்க வேண்டும். தோளில் உள்ள பூஞ்சைகள். கிருமிகள் போன்றவற்றை சுத்தம் செய்து கொள்ள இது உதவும். கோடைகாலங்களில் கூடுமானவரை பருத்தி ஆடைகளையும் மெல்லிய ஆடைகளையும் அணிய வேண்டும். கோடைகாலங்களில் வெள்ளை மற்றும் வெளிர் நிறத்தினான ஆடைகளை அணியுங்கள். வியர்த்திருக்கும் போது குளிக்க கூடாது. வியர்வை இருக்கும் போது குளித்தால் தலைவலி மற்றும் வேர்க்குரு போன்ற தொந்தரவு ஏற்படும். கை கால்களில் நகங்களை வெட்டி சீராக வைத்துக் கொள்ளுங்கள். கை நகங்கள் தோளில் சொறியும்போது தோளில் உறைந்து ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது. உச்சி வெயிலில் பிரயாணிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். நீர் அதிகமாக அருந்துங்கள் வாரத்தில் இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். கூடுமானவரை குளிர்ந்த நீரிலேயே நீராடுங்கள். நீராகாரம் மோர் போன்றவற்றை அருந்துவது நல்லது எளிதில் செரிக்கக் கூடிய எளிமையான உணவுகளையே எடுத்துக் கொள்ளுங்கள். வறட்சிக்காற்றோ, புழுதிக்காற்றோ சுவாசிக்காத வண்ணம் மூக்கை மூடிக்கொள்ளுங்கள். அதிக வெயிலிலோ வண்டியிலோ பிரயாணிக்கும்போது கண்களில் தூசி விழுந்தால் கண்களை குளிர்ந்த நீரில் கழுவவும். 

தற்காப்பு:
               குறைந்தது 2லிட்டரில்  இருந்து 3 லிட்டர் நீர் அருந்துவது நல்லது. எலுமிச்சை, பலா அன்னாசி, தர்பூசணி, கிர்ணி பழம், வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம், நுங்கு, பதநீர், இளநீர், கரும்புச்சாறு, புதினாச்சாறு, சர்பத், திராட்சை ஆகியவற்றின் மூலம் வெயிலின் தாக்கத்திலிருந்து இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். இனிப்புச்சுவை கூடுதலாக உள்ள உணவு வகைகள் உகந்தது. கோடையில் பெய்யும் முதல் மழையில் நனைவதோ அல்லது அதனால் ஏற்படும் நீராவியை சுவாசிப்பதும் நோய்களை ஏற்படுத்திவிடும். ஆகையால் அதை தவிர்ப்பது நலம். உள்ளாடைகளை தினந்தோறும் மாற்றுவது நல்லது. இதனால் சொறி, படை போன்றவற்றை தவிர்க்கலாம். காலையில் வெறும் வயிற்றில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் அருந்துங்கள். இது நீர் நேரடியாக உடலில் கலக்க உதவுகிறது. வெயில் காலங்களில் காரமான உணவுகளை தவிர்ப்பது நலம். உடல் எரிச்சல் மனதிலும் எரிச்சலை ஏற்படுத்துவதால் தினம்தோறும் தியானம் செய்வது நல்லது தினந்தோறும் காலையும் மாலையும் தியானம் செய்வது உடலையும் மனதையும் குளிர்ச்சியூட்டும்.

முடிவுரை:
           எல்லா பருவங்களைப் போலவே, கோடைக்கும் அதன் சொந்த தனித்துவம் உள்ளது. இந்த பருவத்தில் நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன, ஆனால் இந்த பருவத்தை முழுமையாக அனுபவிக்க முடியும். எதை செய்ய வேண்டும் செய்ய கூடாது என்பதை உணர்ந்து அவற்றை பின்பற்றுவோம். மேலும்  அதிக மரங்களை வளர்த்து எதிர்கால சந்ததிகளை நன்றாக வாழ வைப்போம்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

பசுமையும் பாரம்பரியமும் - பேச்சுப்போட்டி,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு -பேச்சுப் போட்டி