குடியரசு தின கட்டுரை

முன்னுரை:
உலகில் பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியா பல்வகை மதங்களையும், பல்வேறு கலாச்சாரங்களையும் கொண்டிருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு உலகத்தவர்க்கு வழிகாட்டியாகக் திகழ்கிறது. இன்று நாம் வாழ்வது மக்களாட்சி முறையில் அந்நியரிடமிருந்து விடுதலை பெற்ற நம் நாடானது 1950, ஜனவரி 26-ஆம் நாள் குடியரசானது. அந்த நாளே வருடந்தோறும் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.

குடியரசு:
நம் நாடானது 1947-இல் சுதந்திரம் பெற்றாலும் குடியரசானது 1950இல்தான். ஏனெனில் நாடு சுதந்திரம் பெற்ற போது 565 சுதேச சமஸ்தானங்கள் இருந்தன. இதில் 552 சமஸ்தானங்கள் மட்டும் இணைந்தன. ஹைதராபாத், காஷ்மீர், திருவிதாங்கூர் போன்று இணையாமல் இருந்த சமஸ்தானங்களை எல்லாம் இணைத்த பெருமை சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு உண்டு. அதனால் அவர் 'இரும்பு மனிதர்' என்று அழைக்கப்பட்டார். சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஆவார்.

கொண்டாடுகின்ற முறை:
ஜனவரி 26-ஆம் நாள் வருடந்தோறும் குடியரசுதினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினம் அரசு விடுமுறை நாளாகும். இந்தியாவின் தலைநகரான புதுடெல்லி, செங்கோட்டையின் இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் கொடியேற்றுவார். கொடியேற்றும் பொழுது முப்படைத் தளபதிகளும், முப்படை வீரர்களும் அணிவகுத்து நிற்பர். விழாவில் முப்படைகளும் தங்கள் சாகசங்களை செய்து காட்டும்.
மாநிலத் தலைநகரில் மாநில ஆளுநர் கொடியேற்றுவார். பள்ளிகளில் தலைமையாசிரியர் கொடியேற்றுவார், பின்னர் மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கப்படும்.

குடியரசின் பொருள்:
தனிமனிதன் சமுதாயத்தைச் சிந்திப்பதும், சமுதாயம் தனி மனிதனைச் சிந்திப்பதும் வேண்டும். தனிமனிதன் வேறு, சமுதாயம் வேறன்று. எனவே, ஒவ்வொரு குடிமகனும் தன்னை வளர்த்துக் கொள்வதுடன், சமுதாய வளர்ச்சிக்கும் பாடுபட வேண்டும். 'மக்களுக்காக மக்களால் - மக்களே ஆள்வது' என்பதுதான் குடியரசின் தத்துவம். இவ்வகையில், இந்தியக் குடியரசு உலகின் ஏனைய குடியரசுகளுக்கு முன்னோடியாகத் திகழ்கின்றது.

நமது கடமை:
இன்றைய நிலையில், தனித்து வாழ எவராலும் இயலாது. கூட்டு வாழ்க்கையே நாட்டு வாழ்க்கை. விட்டுக் கொடுத்து வாழ்வது வளர்ச்சிக்கு நல்லது. வீட்டு வாழ்க்கையால் ஒற்றுமையையும், நாட்டு வாழ்க்கையால் ஒருமைப்பாட்டையும் கடைப்பிடிப்போமாக! எல்லாரும் எல்லாமும் பெற இயன்றதைச் செய்வோமாக! "உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு". என்றார் திருவள்ளுவர். அந்த இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்வோமாக!

முடிவுரை:
நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை' என்பதைக் கவனத்தில் கொண்டு வாழ்வோம். ஆண்டுதோறும் குடியரசுத் திருநாளைக் கொண்டாடுவதோடு நின்றுவிடாமல், அன்றாட வாழ்வில் அதன் கடமைகளைச் செய்து, சிறந்த குடியரசாக இப்பாரதத் திருநாட்டை பெருநாட்டை விளங்கச் செய்வோமாக! . ஒவ்வொரு மதத்தவருக்கும் அவர்களுக்கென தனித்தனியாக பண்டிகைகள், விழாக்கள் உண்டு. ஆனால் இந்திய மண்ணில் வாழும் ஒவ்வோர் இந்தியனும் சேர்ந்து கொண்டாடும் விழாக்களில் இது மிகவும் முக்கியமானது....

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

பசுமையும் பாரம்பரியமும் - பேச்சுப்போட்டி,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு -பேச்சுப் போட்டி