ஆசிரியர் தின கவிதை

ஓராசிரியராயின் பள்ளியின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் அரும்பணியை ஆற்றுபவர் பேராசிரியராயின் பல்கலைக்கழகத்தின் பெயருக்குப் பெரும்பறையைச் சாற்றுபவர்

ஆறாத மடமையெனும் அகப்புண்ணை ஆற்றி அவர்
அறியாமை காரிருளை போக்குவர். கூறாக மாணவரின் புத்தியினை தீட்டி அவர் குன்றின் மேல் விளக்காக ஆக்குபவர்

தீராத சினத்தோடு திருட்டு,பொய்,புரட்டெல்லாம்
திரும்பியுமே பார்க்காமல் ஓட்டுபவர் தாராள மனத்தோடு தயை, இரக்க குணத்தோடு தன்மானம் ஒழுக்கத்தை ஊட்டுபவர்

ஏராள மானவரை ஏணியாக இருந்துஅவர் எட்டாத உயரத்திற்கு ஏற்றுபவர் பாரோர்கள் யாவருமே பாராட்டும் மிகப்பெரிய
பதவிகளை வகிப்பவராய் மாற்றுபவர்

நாராகி வேதனையில் நலிபவரின் வாழ்வதனில் நம்பிக்கை யாம் வாசனைப் பூச்சூட்டுபவர் போராடி வாழ்வதனில் புதிய பல சாதனைகள் புரியக்கூறும் போதனை தேன் கூட்டு பவர்

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேச்சுப்போட்டி முன்னுரை-1 (தொடக்கஉரை)

பசுமையும் பாரம்பரியமும் - பேச்சுப்போட்டி,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு -பேச்சுப் போட்டி