காமராஜர் கவிதை - பாகம் 1
தோளில் துண்டும்,
பேச்சில் அன்பும்,
நடத்தையில் பண்பும்,
பெரியோரிடத்தில் பணிவும்,
அரசியலில் துணிவும்,
இனம் காட்டும் நிறம்,
குணம் சொல்லும் உடை,
தைரியம் அறிவிக்கும் உடல்,
வணங்கத் தோன்றும் முகம்,
வாழ்க்கையில் எளிமை,
அனைத்திலும் பொறுமை,
வென்றபோது ஆடாதவர்,
தோற்றபோது வாடாதவர்,
உலகம் போற்றும் மகராசர்,
அவரே எங்கள் காமராசர்....
காமராசர் மறைந்தவுடன் அவர் வசித்த வாடகை வீட்டை
வீட்டின் சொந்தக்காரர் எடுத்துக் கொண்டார்,
பயன்படுத்திய காரை காங்கிரஸ் எடுத்துக்கொண்டது,
உடலை அக்னி எடுத்துக் கொண்டது,
அவருடைய பெயரை மட்டும் வரலாறு எடுத்துக்கொண்டது...
தங்கமே
தண்பொதிகைச் சாரலே,
தண்ணிலவே,
சிங்கமே என்றழைத்துச்
சீராட்டும் தாய் தவிர
சொந்தமென்று ஏதுமில்லை,
துணையிருக்க மங்கையில்லை,
தூயமணி மண்டபங்கள்,
தோட்டங்கள் ஏதுமில்லை,
ஆண்டி கையில் ஓடிருக்கும்
அதுவும் உனக்கில்லையே...
நாடாள வந்தாரு நாடாள வந்தாரு
ராஜாங்கம் கண்டாரம்மா
கல்லாமை கண்டாரு
இல்லாமை கண்டாரு
கல்லூரி தந்தாரம்மா
அம்மம்மா கல்லூரி தந்தாரம்மா
முழந்துண்டு சட்டைக்கும்
முதலில்லா தொழிலாளி
பழனிமலை ஆண்டிக்கு
பக்கத்தில் குடியிருப்போன், பொன்னில்லான் பொருளில்லான்,
புகழன்றி வசையில்லான்,
இல்லானும் இல்லான்,
இல்லையெனும் ஏக்கமில்லான், அரசியலை காதலுக்கு அர்ப்பணிப்போர் மத்தியிலே,
காதலையே அரசியலில் கரைத்துவிட்ட கங்கையவன்
எங்கள் காமராசன்
அருமை
பதிலளிநீக்கு